• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தை திருத்துதல்
- 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டத்திலுள்ள வரையறைகள் காரணமாக போட்டிகரமாகவும் துரிதமாகவும் மாறுபடும் நிதி சந்தையில் செயலாற்றுவதற்கு தேசிய சேமிப்பு வங்கிக்குள்ள சிரமங்கள் இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், நிறுவனம் சார்பில் நிலைபேறுடைய விருத்தியினைப் பேணும், புதிய வர்த்தக வாய்ப்புகளை இனங்காணும் மற்றும் புதிய தொழில்முயற்சி மாதிரியொன்றை கட்டியெழுப்புவதன் மூலம் வங்கியின் செயற்பாட்டு பணிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தேசிய சேமிப்பு வங்கி சட்டத்திலுள்ள சில பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, திருத்த சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.