• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டமூலம்
- இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டமூலத்தினை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு 2023‑04‑03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் செய்யப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாக 'இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டமூலமானது' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. பொது மக்களுக்கும் ஆர்வமுள்ள சகல தரப்பினர்களுக்கும் மேலும் அவர்களுடைய கருத்துக்களையும் பிரேரிப்புகளையும் சமர்ப்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.