• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு 2023‑03‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.