• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேசிய வானூர்தி தேடல் மற்றும் மீட்புத் திட்டத்திற்கான அங்கீகாரம்
- 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானசேவைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையினால் தேசிய வானூர்தி தேடல் மற்றும் மீட்புத் திட்ட ஒழுங்குவிதி தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இது 2023‑08‑28 ஆம் திகதியிடப்பட்டதும் 2347/02 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதியொன்றாக வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.