• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
யான்ஓயா நீர்த்தேக்கம் மற்றும் இடது கரை பிரதான கால்வாய் நிர்மாணிப்பு காரணமாக காணிகள் இல்லாமற்போன தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டிய மாற்று வயற்காணிகளுக்குப் பதிலாக நட்டஈடு வழங்குதல்
- யான்ஓயா நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படும் போது ஹொரொவ்பத்தான மற்றும் கோமரன்கடவல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிகளும் இடது கரை கால்வாய் நிர்மாணிப்பின் போது ஹொரொவ்பத்தான, பதவிய மற்றும் ஶ்ரீபுர ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலுள்ள காணிகளும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணிகளை இழந்த குடும்பங்களில் ஒரு பகுதியினருக்கு மாற்று வயற்காணிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, வயற்காணிகளாக அபிவிருத்தி செய்வதற்கு குறித்த பிரதேசங்களுக்கு அண்மையில் காணிகள் இல்லாமையினால் சுவீகரிக்கப் பட்டுள்ளன காணி உரிமையாளர்களுக்கு வயற்காணிகளுக்குப் பதிலாக மேலதிக நட்டஈட்டுத் தொகையொன்றை வழங்குவதற்கு 2023‑03‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதவற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* யான்ஓயா நீர்த்தேக்க நிர்மாணிப்பு காரணமாக காணிகள் இல்லாமற்போன தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயற்காணிகளுக்குப் பதிலாக போதுமான காணியினை அபிவிருத்தி செய்வதற்கு விடுவித்துக் கொள்ளும் சாத்தியம் இல்லாமையினால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொள்ளாத மற்றும் வேறு பிரதேசங்களில் வதிந்துள்ள இதுவரை மாற்று நீர்ப்பாசன காணிகள் வழங்கப்படாத குடும்பங்களுக்கு காணிகளுக்குப் பதிலாக 1.8 மில்லியன் ரூபா வீதம் நட்டஈட்டுத் தொகையினை வழங்குதல்.

* இடது கரை பிரதான கால்வாய் நிர்மாணிப்பு காரணமாக காணிகள் இல்லாமற்போன தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயற்காணிகளுக்குப் பதிலாக போதுமான காணியினை அபிவிருத்தி செய்வதற்கு விடுவித்துக் கொள்ளும் சாத்தியம் இல்லாமையினால் 1 1/2 ஏக்கர் வயற்காணிகளுக்குப் பதிலாக 1.8 மில்லியன் ரூபா வீதம் நட்டஈட்டுத் தொகையினை வழங்குதல்.