• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தெரிவுசெய்யப்படட வாசனை திரவிய பொருட்களின் இறக்குமதியும் பதனிடலும் அத்துடன் எண்ணெய் சாறுகள், oleoresins மற்றும் சக்கை வடிவங்களில் மீள் ஏற்றுமதி செய்தலும்
- இலங்கையின் வாசனை திரவியங்களை மூல வடிவில் ஏற்றுமதி செய்வதைவிட பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானத்தினை ஈட்டக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது. சர்வதேச சந்தையில் முற்றுமுழுதும் புதிய உற்பத்தியொன்றாக உயர் மட்டத்தைக் கொண்ட பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் மூல வடிவிலான சில வாசனை திரவிய வகைகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்துடன் பிரதான கம்பனிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அதற்கிணங்க, குறித்த இந்த உற்பத்தியாளர்களுக்கு அவர்களுடைய தேவைகளை விரிவுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தெரிவுசெய்யப்படட வாசனை திரவிய பொருட்களின் இறக்குமதி, பதனிடல் அத்துடன் எண்ணெய் சாறுகள், oleoresins மற்றும் சக்கை வடிவங்களில் மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைமுறையினை செயற்படுத்துவதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.