• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் காப்புறுதி வர்த்தகத்தை பிரித்தல்
- அரசாங்க தொழில்முயற்சிகளை மறுசீரமைப்பதன் கீழ் 2011 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க காப்புறுதி தொழிலை முறைப்படுத்தும் (திருத்த) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஆயுள் மற்றும் பொது காப்புறுதி வர்த்தகத்தை புறம்பான சட்டரீதியிலான நிறுவனங்களாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு 2023‑03‑13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஆயுள் மற்றும் பொது காப்புறுதி வர்த்தக பணிகளை இந்த கூட்டுத்தாபனத்தின் பூரண துணை நிறுவனங்களான Sri Lanka Insurance Corporation Life Ltd மற்றும் Sri Lanka Insurance Corporation General Ltd ஆகியவற்றிற்கு ஒதுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.