• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சப்ரகமுவ மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளல்
- சப்ரகமுவ மாகாணத்தில் ஆங்கில மொழியினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியினை வழங்கி அவர்களுடைய மொழி அறிவு மற்றும் கற்பித்தல் ஆற்றலை விருத்திச் செய்யும் ஆற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் கீழ் 700 ஆசிரியர்களை தெரிவுசெய்து, கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த Teaching Knowledge Test பாடநெறியின் மூலம் குறித்த இந்த ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியினை வழங்குவதற்கு எதிர்பார்ககப்படுகின்றது. சப்ரகமுவ மாகாண சபை நிதியிலிருந்து உத்தேச பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, அதன் பொருட்டு சுமார் 51 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சப்ரகமுவ மாகாண சபைக்கும் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.