• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
SriLankan Airlines சேவை சார்பில் 09 விமான நிலையங்களில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
- வரையறுக்கப்பட்ட Sri Lankan Airlines கம்பனிக்கு பெங்கொக், பீஜிங், துபாய், ஹைதரபாத், கராச்சி, மாலே மற்றும் ரியாத் ஆகிய விமான நிலையங்களில் விமான எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தம் 2024‑02‑29 ஆம் திகதியுடனும் கோலாலம்பூர் மற்றும் ஜகார்த்தா ஆகிய விமான நிலையங்களில் விமான எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தம் 2024‑03‑31 ஆம் திகதியுடனும் முடிவடையவுள்ளது. குறித்த விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் சார்பில் சர்வதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. 11 விமான எரிபொருள் கம்பனிகள் விலை முன்வைத்துள்ளதோடு, கராச்சி விமான நிலையம் சார்பில் விலை முன் வைப்பொன்றும் ஏனைய விமான நிலையங்கள் 8 சார்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விலை முன்வைப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த அனுசரணையான விலைகளை முன்வைத்துள்ள கேள்விதாரர்களுக்கு உரிய ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.