• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தம்மாம் விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட Sri Lankan Airlines கம்பனி சார்பில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- வரையறுக்கப்பட்ட Sri Lankan Airlines கம்பனியின் விமானங்களுக்கு தம்மாம் விமான நிலையத்தில் விமான எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தம் 2023‑12‑31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. தற்போது அங்குள்ள ஒரே விமான எரிபொருள் வழங்குநரான Modern Consortium for Refueling Aircraft Co. Ltd. கம்பனியிடமிருந்து மாத்திரம் விலை கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு குறித்த ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்தமொன்றாக வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.