• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்திற்கான திருத்தங்கள்
- 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சார்பில் பதிவு செய்யும் எல்லையை ஆண்டொன்றில் வரி அறவிடக்கூடிய வழங்கல்களின் மொத்தப் பெறுமதி 80 மில்லியன் ரூபாவிலிருந்து 60 மில்லியன் ரூபாவாக குறைப்பதற்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி வீதத்தை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் வரை அதிகரிப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரிச் சட்டத்தை திருத்துவதற்கு 2023‑10‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைநரினால் உரிய திருத்தங்களை உள்ளடக்கி திருத்த சட்டமூலமானது வரையப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.