• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பூநகரி குளத்தின் மேற்பரப்பில் தாபிக்கப்படவுள்ள 700 மெகாவொட் சூரிய வலுசக்தி கருத்திட்டம்
- பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி நெய்யரி துணை நிலையம் வரை தேவையான அனுப்பீ்ட்டு கம்பி வழிகளை நிர்மாணித்தல் அடங்கலாக 100 சதவீதம் மின்கல களஞ்சிய முறைமையுடன் கூடிய 700 மெகாவொட் சூரிய வலுசக்தி நிலையமொன்றை அபிவிருத்தி செய்வதற்கு M/s United Solar Energy SL (Pvt.) கம்பனியினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்பை கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கும் கருத்திட்ட பிரேரிப்பை மதிப்பிடுவதற்கும் வலுசக்தி கொள்வனவு கட்டணங்களைத் தீர்மானிப்பதற்குமாக அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் 2023‑09‑11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க இணக்கப்பேச்சுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு M/s United Solar Energy SL (Pvt.) கம்பனிக்கு உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குரியதாக மின்சாரம் கொள்வனவு செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.