• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் கலப்பு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளின் நிர்மாணிப்பு
- யாழ் குடா நாட்டின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்பவர்களுக்கு மின்சார விநியோகத்தின் பொருட்டு 11 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையொன்றை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஒப்பந்தக்காரர்களிடமிருந்து மாத்திரம் விலை கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு முன்வைக்கப்பட்ட பிரேரிப்பினை மதிப்பிட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு குறித்த இந்த ஒப்பந்தத்தை U-Solar Clean Energy Solution (Pvt) Ltd. கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.