• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- சீனி இறக்குமதிக்காக அமுலில் இருந்த கிலோ கிராம் ஒன்றுக்கு 25 சதம் என்னும் விசேட வியாபார பண்டங்கள் வரியினை கிலோ கிராம் ஒன்றுக்கு 50/- ரூபாவாக அதிகரிப்பதற்கு 2023‑10‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் பொருட்டு 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக 2023‑11‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2356/20 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ள கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.