• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1937 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வன விலங்கு, தாவர பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் VIII ஆம் அட்டவணையைத் திருத்துதல்
- 2022 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க தாவர, வன விலங்கு பாதுகாப்பு (திருத்த) சட்டத்தின் மூலம் இறுதியாக திருத்தப்பட்ட 1937 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வன விலங்கு, தாவர பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் VIII ஆம் அட்டவணையின் கீழான தாவர வகுப்பீட்டு வழிமுறைக்கு அமைவாக 121 தாவர இனங்களுக்குரிய 680 தாவர விசேடங்களுக்கு மேலான எண்ணிக்கை பாதுகாக்கப்பட வேண்டிய தாவரங்களாக வௌிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் குறித்த அட்டவணையைத் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தாவர வகுப்பீடு மற்றும் பெயரிடல், சூழலியல், வனவுயிர் பாதுகாப்பு உட்பட மனித தாவர பூங்காவியல் போன்ற விடயத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வன விலங்கு, தாவர பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் VIII ஆம் அட்டவணையைத் திருத்துவதற்கும் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.