• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
காலனித்துவ யுத்த நீதிமன்றத்தின் சட்டவிரோத தீர்ப்பின் மூலம் 108 வருடங்களுக்கு முன்னர் 27 வயதுடைய திரு.எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் அவர்களின் கொலை தொடர்பில் விசாரணையொன்றை நடாத்துதல்
- இலங்கையின் காலனித்துவ நிர்வாக ஆட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக செயற்பாடுகளை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி யுத்த நீதிமன்றத்திற்கு ஆட்படுத்தி தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாக்கி அச்சந்தர்ப்பத்தில் 27 வயது நிரம்பிய திரு.எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் அவர்கள் 1915‑07‑07 ஆம் திகதியன்று எவ்வித மேன்முறையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். மரணித்த திரு.எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் அவர்களின் பூதவுடல் யுத்த சட்டத்தின் கீழ் குற்றவாளியொருவரின் மரணச் சடங்கினைச் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நடவடிக்கைமுறையினை பின்பற்றி வௌிப்படுத்தப்படாத பிரதேசமொன்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய கொலை அப்போது இந்நாட்டினை நிர்வகித்த சிரேட்ட உத்தியோகத்தர்களினால் செய்யப்பட்ட திட்டத்தின் விளைவாகுமென பின்னர் கண்டறியப்பட்டது. அதற்கிணங்க, இந்தக் கொலை தொடர்பில் உண்மையான தகவல்களை எண்பித்து அவருக்கு நியாயத்தினை வழங்கும் பொருட்டு உரிய விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்குச் சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர் அணில் குணரத்னவின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.