• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை போக்குவரத்து சபைக்கு எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
- இலங்கை போக்குவரத்து சபைக்கு எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்வதற்காக தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் ஒவ்வொரு வகைகளையும் அடிப்படையாகக் கொண்டு Lanka IOC PLC நிறுவனத்திடமிருந்தும் Chevron Lubricant Lanka PLC நிறுவனத்திடமிருந்தும் எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க இரண்டு கம்பனிகளுக்கும் உரிய பெறுகைகளை வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.