• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் இரத்மலானை புகையிரத டீசல் பன்முக அலகு தொழிற்சாலையை வடிவமைத்து நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை கையளித்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் இரத்மலானை புகையிரத டீசல் பன்முக அலகு தொழிற்சாலையை வடிவமைத்து நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை கையளிப்பதன் பொருட்டு சர்வதேச ரீதியில் போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 09 விலை மனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் இரு (02) விலைமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 07 விலைமனுக்களும் மதிப்பிடப்பட்டதன் பின்னர் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பேரில் அனுசரணையான ஆகக்குறைந்த விலையினை சமர்பித்துள்ள China Civil Engineering Construction Corperation கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.