• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கு வருகை தருகின்ற வௌிநாட்டவர்களின் விசா விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் பெற்ற முகவர்களை நியமித்தல்
- இலங்கைக்கு வருகை தரும் வௌிநாட்டவர்களுக்கான விசா விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் பெற்ற முகவரொருவராக கடமையாற்றுவதன் பொருட்டு GBS Technology Services & IVS Global - FZCO மற்றும் VFS VF Worldwide Holdings Ltd நிறுவனத்தினால் சமரப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை மதிப்பீடு செய்யும் பொருட்டு மதிப்பீட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2023-09-11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க நியமிக்கபட்ட மதிப்பீட்டுக்குழுவினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புரைகளுக்கு இணங்க வரையப்பட்டுள்ள உரிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.