• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மனித உரிமைகள் பற்றி அமைச்சுகளுக்கு இடையில் நிலையியற் குழுவைத் தாபித்தல்
- மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் என்பன சம்பந்தமாக இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர் ஆய்வு மற்றும் அறிக்கையிடல் என்பவற்றின் பயனுள்ள உள்நாட்டு செயல்முறையின் பொருட்டு நிலையான தேசிய கட்டமைப்பொன்றாக செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் மனித உரிமைகள் தொடர்பில் அமைச்சுகளுக்கு இடையில் நிலையியற் குழுவொன்றைத் நியமிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஒருங்கிணைக்கும் / பிரதான முகவராண்மையாக செயலாற்றி மனித உரிமைகள் தொடர்பில் அமைச்சுகளுக்கிடையில் நிலையியற் குழுவைத் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.