• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சமூக அடிப்படையிலான சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு உடன்பாட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுதல்
- இலங்கையின் மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி 2.172 பில்லியன் கொரிய வொன் கொடையின் கீழ் சமூக அடிப்படையிலான சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கொரிய சுற்றுலா அமைப்புக்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை செய்துகொள்ளும் பொருட்டு 2023‑01‑09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் அதன் சாதகமான நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு முழுமையான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டப்பட்டிருந்த போதிலும் கொரிய சுற்றுலா அமைப்பின் பிரதிநிதிகள் உரிய மாகாணங்களுக்கு விஜயம் செய்ததன் பின்னர் குறித்த இந்த முன்னோடி கருத்திட்டத்திற்குப் பதிலாக திட்டமிடப்பட்டிருந்தவாறு முழுமையான கருத்திட்டத்தை ஒரே தடவையில் ஆரம்பிப்பதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இரு தரப்பினர்களுக்கு இடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கிணங்க, நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.