• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
- குற்றவியல் விடயங்களின்போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றி கொரிய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சட்ட திணைக்களத்தின் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் கொரிய குடியரசின் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவும் இணைந்து வரைவு உடன்படிக்கையொன்றை தயாரித்துள்ளன. இதனூடக இரு நாடுகளிலும் குற்றங்களைத் தடுத்தல், விசாரணைகளைச் செய்தல், முறைப்பாடுகளை ஆவணப்படுத்தல் மற்றும் குற்றங்களை குறைத்தல் போன்ற நோக்கங்களை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த உடன்படிக்கையை இரு தரப்பினர்களுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் இரு நாடுகளின் இராஜதந்திர தூதரகங்கள் ஊடாக செயல்வலுவாக்கமளிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.