• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
உத்தேச இந்திய ‑ இலங்கை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையின் 12 ஆவது சுற்று கலந்துரையாடல்
- உத்தேச இந்திய ‑ இலங்கை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான 12 ஆவது சுற்று கலந்துரையாடல் 2023‑10‑30 ஆம் திகதியிலிருந்து 2023‑11‑01 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்தப்பட்டதோடு, அச்சந்தர்ப்பத்தில் உரிய சில துறைகள் சம்பந்தமாக இரு தரப்பினதும் செயற்பாட்டு குழுக்களினால் உடன்பாடு காணப்பட்டுள்ளது. உத்தேச உடன்படிக்கை சம்பந்தமான 13 ஆவது சுற்று கலந்துரையாடல் 2024‑01‑08 ஆம் திகதியிலிருந்து 2024‑01‑10 ஆம் திகதிவரை இந்தியாவில் நடாத்துவதற்கும் 2024 மார்ச் மாதமளவில் தொழிநுட்பமட்ட கலந்துரையாடல்களை முற்றாக்குவதற்கும் இரு தரப்பும் உடன்பாட்டிற்கு வந்துள்ளது. 12 ஆவது கலந்துரையாடல்கள் சம்பந்தமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.