• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Enoxaparin Sodium தடுப்பூசி 1,450,000 கொள்வனவு செய்வதற்கான கேள்விகள்
- இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Enoxaparin Sodium 6,000 IU, மி.லீ 0.6 முன்நிரப்பிய தடுப்பூசி தண்டுகள் 1,450,000 கொள்வனவு செய்வதற்காக 02 பெறுகைகளின் கீழ் சர்வதேச ரீதியில் கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு பெறுகைகளை வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Enoxaparin Sodium தடுப்பூசி 450,000 கொள்வனவு செய்வதற்கான பெறுகையை M/s Gulf Pharma (Pvt.) Limited நிறுவனத்திற்கு கையளிப்பதன் சார்பிலும்.

* Enoxaparin Sodium தடுப்பூசி 1,000,000 கொள்வனவு செய்வதற்கான பெறுகையை M/s Slim Pharmaceuticals (Pvt.) Limited நிறுவனத்திற்கு கையளிப்பதன் சார்பிலும்.