• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
குருதி மாற்றல் மருத்துவ தொழில் வல்லுநர்கள் மற்றும் சிகிச்சை பணியாட்டொகுதியினர் சார்பிலும் ஆற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- குருதி மாற்றல் மருத்துவ தொழில் வல்லுநர்கள் மற்றும் சிகிச்சை பணியாட்டொகுதியினரின் குருதி மாற்றல் மருத்துவ விஞ்ஞானம் சம்பந்தமான அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் கல்வி நிகழ்ச்சித்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் 41.28 மில்லியன் ரூபா மானியமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை ஐரோப்பா, இந்திய, இலங்கை பல்கலைக்கழகங்கள், கொழும்பு தேசிய குருதிமாற்றல் சேவை மற்றும் ஆசிய குருதி மாற்றல் சங்கம் ஆகிய பங்குதாரர்களைக் கொண்ட கூட்டினால் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய தரப்பனர்களுக்கிடையில் கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.