• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சுற்றாடல் மாற்றம் பற்றிய தேசிய கொள்கை
- இலங்கை காலநிலை மாற்றங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடொன்றாவதோடு, இது உள்நாட்டு பொருளாதார விருத்தியின்பால் பல்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. நிலைபேறுடைய அபிவிருத்தியின் பொருட்டு கவனம் செலுத்தி காலநிலை மாற்றங்களினால் உருவாகும் தாக்கங்களை குறைக்கும் நடவடிக்கைகளை செயற்படுத்தும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று காலநிலை ஆபத்துக்கள், தேசிய முன்னுரிமைகள், புதிய போக்குகளைக் கொண்ட உலகளாவிய வளர்ச்சிகள், காலநிலைக்குரிய நிகழ்ச்சித்திட்ட பொறிமுறைகள் மற்றும் நிதியங்களிலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்தல் என்பன பொருட்டு 2012 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் பற்றிய தேசிய கொள்கையில் கணிசமான இற்றைப்படுத்தல்கள் தேவையென மேலும் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுற்றாடல் அமைச்சு உரிய தரப்பினர்களின் கருத்துக்களை கோரி தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு, காலநிலை மாற்றங்களின் தாக்கங்களுக்கு முகங்கொடுக்கும் தேசிய திட்டம், பாரிஸ் உடன்படிக்கையிலுள்ள பொறுப்புக்கள் அதேபோன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்புடன்கூடிய சமவாயம் என்பவற்றுக்கமைவாக இற்றைப்படுத்தப்பட்டுள்ள சுற்றாடல் மாற்றம் பற்றிய தேசிய கொள்கையானது நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, குறித்த கொள்கைக்கு அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.