• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் காலநிலை மாற்றம் பற்றிய ஒத்துழைப்பு ஒப்பந்தம்
- காலநிலை மாற்றம் பற்றிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க உத்தேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் குறித்த உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்துவற்கான வசதிகளை செய்வதற்கும் ஒருங்கிணைப்பதற்குமாக காலநிலை மாற்றம் பற்றிய கூட்டு குழுவொன்றை தாபிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.