• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல் நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புகளை அல்லது ஊக்குவிப்புகளை வழங்குதல் பற்றிய வழிகாட்டு நெறிகள் - தீர்வையற்ற தொழிற்பாடுகள்) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல் நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புகளை அல்லது ஊக்குவிப்புகளை வழங்குதல் பற்றிய வழிகாட்டு நெறிகள்) ஒழுங்குவிதிகள் 2023‑10‑25 ஆம் திகதியிடப்பட்டதும் 2355/30 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.