• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
- நிபுணத்துவ மருத்துவர்களை பதிவு செய்வதற்கு உரியதாகவுள்ள ஏற்பாடுகளை திருத்துவதற்கு 1927 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு முன்னாள் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது 2023‑08‑07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, அச்சந்தர்ப்பத்தில் பிரேரிக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் மேலும் திருத்தங்களை ஆராய்ந்து பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவுக்கு தொடர்புபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, இந்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.