• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அளவை மற்றும் வரைபடமாக்கல் நிறுவனம் தாபிக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தை திருத்துதல்
- அளவை மற்றும் வரைபடமாக்கல் துறையில் உயர் கல்வி வசதியினை வழங்கும் நிறுவனமொன்றாக செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் அளவை மற்றும் வரைபடமாக்கல் நிறுவனம் தாபிக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தை திருத்தும் பொருத்தப்பாடு இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உயர்தர கணித பிரிவு அதேபோன்று ஏனைய பாடத்திட்டங்களில் கல்வி பயின்று பல்கலைக்கழக அனுமதியினைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு அளவை மற்றும் வரைபடமாக்கல் துறையில் உயர் கல்வி வாய்ப்பினை உருவாக்கி உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு தொழிற்சந்தைக்கு ஏற்ற செய்முறை பயிற்சிகளுடனான பட்டதாரிகளை உருவாக்குவது உத்தேச திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க அளவை மற்றும் வரைபடமாக்கல் நிறுவன சட்டத்தை திருத்துவதற்கு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.