• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
Polyethylene Terephthalate மற்றும் High Impact Polystyrene பிளாஸ்டிக் பொதிகள் சார்பில் QR அடிப்படையிலான வைப்புகளை மீளச் செலுத்தும் முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிப்புகளை கோருதல்
- பிளாஸ்டிக் பொதிகளாக பயன்படுத்தப்படும் Polyethylene Terephthalate போத்தல்கள் மற்றும் High Impact Polystyrene கோப்பைகள் உட்பட ஏனைய பிளாஸ்டிக் பொதிகள் பெரும்பாலானவை ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு சுற்றாடலில் அப்புறப்படுத்தப்படுகின்றது. இத்தகைய கழிவுகளை அப்புறப்படுத்தும் போது நுகர்வோர் பொறுப்பற்ற விதத்தில் செயலாற்றுதல், வினைத்திறன்மிக்க சேகரிப்பு வழிமுறை இல்லாமை போன்ற காரணங்களினால் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கூர் உணர்வுமிக்க சுற்றாடல் முறைமைகளிலும் வௌிவாரி சுற்றாடலிலும் சேர்கின்றன. இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை முகாமிப்பதற்கு 02 முன்னோடி கருத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளது. முன்னோடி கருத்திட்டங்ள் இரண்டினதும் பெறுபேற்றின் அடிப்படையில் வெற்று கலன்களை மீள சேகரிக்கும் போது தற்காலிக வைப்பினை மீள செலுத்தும் வழிமுறை பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இந்த வழிமுறையின் கீழ் நுகர்வோர் உரிய பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் விற்பனை செய்பவர் தற்காலிகமாக நிதி வைப்பொன்றினை பெற்றுக் கொள்வதோடு, வெற்று போத்தல் / பொதிகள் மீள கையளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தற்காலிக வைப்பினை நுகர்வோருக்கு மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழிமுறையை மேலும் விருத்தி செய்வதற்கு QR அடிப்படையிலான குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு பொருத்தமான நிறுவனங்களிடமிருந்து பிரேரிப்புகளை கோருவதற்கும் தெரிவுசெய்யப்படும் நிறுவனத்தின் மூலம் QR குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு வைப்புகளை மீளச் செலுத்தும் முறையினை நடைமுறைப்படுத்துவதற்குமாக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.