• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தெற்காசிய தகைமைகள் சிபாரிசு கட்டமைப்பினை இலங்கையில் அமுல்படுத்துதல்
- பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பினை விரிவுபடுத்துவது சம்பந்தமாக 2014 ஆம் ஆண்டில் நேபாளம் கத்மண்டு நகரத்தில் நடாத்தப்பட்ட சார்க் அரச தலைவர்களின் 18 ஆவது கூட்டத்தொடரில் முன்னுரிமை கவனம் செலுத்தப்பட்டதோடு, இது தெற்காசிய தகைமை சிபாரிசு கட்டமைப்பு உருவாகுவதற்கு அடிப்படையாய் அமைந்தது. இதன் பெறுபேறாக கல்வித்துறையிலும் அதேபோன்று தொழில் படையணியினதும் திறன்களை இனங்காண்பதற்கு தெற்காசிய தகைமைகள் சிபாரிசு கட்டமைப்பினை வரைவதற்கு உலக தொழிலாளர் அமைப்பின் தலையீட்டின் மீது 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பொருட்டிலான தொழிநுட்பகுழு கூட்டங்களில் இலங்கை பங்குபற்றியதோடு, இலங்கை அடங்கலாக உறுப்பு நாடுகளின் கல்வி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சினால் வரையப்பட்டுள்ள தெற்காசிய தகைமைகள் சிபாரிசு கட்டமைப்பிற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தெற்காசிய தகைமைகள் சிபாரிசு கட்டமைப்பின் மூலம் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றினதும் தகைமைகள் கட்டமைப்பு சார்பில் எவ்வித சட்ட பொறுப்பும் ஏற்படாததோடு, பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் தகைமைகள் கட்டமைப்பிற்கு தொடர்புபடுத்தும் பகுதியாக நடைமுறைப்படுத்தலானது மேற்கொள்ளப்படும். தெற்காசிய தகைமைகள் சிபாரிசு கட்டமைப்பினை இலங்கையில் அமுல்படுத்துவது சம்பந்தமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிபாரிசும் சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க கல்வி அமைச்சும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இணைந்து தெற்காசிய தகைமைகள் சிபாரிசு கட்டமைப்பினை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.