• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் சர்வதேச நியாய வர்த்தக வலையமைப்புகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு கட்டமைப்பில் கைச்சாத்திடுதல்
- சர்வதேச நியாய வர்த்தக வலையமைப்பு என்னும் போது தரங்கள், சான்றுப்படுத்தல், உற்பத்தி உதவி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றின் ஊடாக நலன்களை சமமாக பெற்றுத்தரும் உலகளாவிய வலையமைப்பாகும். சர்வதேச ரீதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் இந்த சர்வதேச நியாய வர்த்தக வலையமைப்பின் பங்குதாரர்களாக செயலாற்றுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் "நியாயமான வர்த்தகம்" மற்றும் "வர்த்தக நீதி" என்பவற்றிற்கு ஒத்துழைப்பு நல்கும் கொள்கை சார்பில் ஆலோசனையினை வழங்குதல் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுடன் செயலாற்றுவதற்கும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை பேணுவதற்கும் குறித்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு நிலவுகின்றது. இலங்கையில் "நியாயமான வர்த்தக எண்ணக்கருவினை" மேம்படுத்துவதற்கு சர்வதேச நியாய வர்த்தக வலையமைப்பின் பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பாட்டுத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை முன்மொழிந்துள்ளது. அதற்கிணங்க, சர்வதேச நியாய வர்த்தக வலையமைப்புகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில் "ஒத்துழைப்பு கட்டமைப்பொன்றை" கைச்சாத்திடும் பொருட்டு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.