• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை (i Road நிகழ்ச்சித் திட்டம்) முற்றாக்கும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி உதவியினைப் பெற்றுக் கொள்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் மீது செயற்படுத்தப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் (i ROAD நிகழ்ச்சித் திட்டம்) கீழ் சில வீதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்கள் நிதி கிடைக்காமையினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டத்தின் கீ்ழ் துரிதமாக பூர்த்தி செய்யவேண்டிய ஆக்கக்கூறுகளை பூர்த்திசெய்வதற்கு 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய கடன் ஒப்பந்தத்தை செய்துகொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.