• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை முதலீட்டு சபை அல்லாத தற்போதுள்ள கம்பனிகள் / 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டு சபை சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள் சார்பில் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டு சபை சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்குதல்
- இலங்கை முதலீட்டு சபையின் கீழ் எடுக்கப்படாததும் தற்போது நடாத்திச் செல்லப்படுகின்றதுமான தொழில்முயற்சிகளை இந்த சபையின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அத்தகைய தொழில்முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு மூதலீட்டாளர்கள் விரும்புகின்றமை தெரியவந்துள்ளது. முக்கியமாக தமது தொழில்முயற்சிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு காரணமாக இலங்கை முதலீட்டு சபையுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு வௌிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாகவுள்ளனர். அதற்கிணங்க, இலங்கை முதலீட்டு சபைக்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி முதலீட்டு சபை சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் முதலீட்டு மேம்பாட்டு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் 2023‑06‑01 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக கட்டளையொன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.