• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
உத்தேச இலங்கை ‑ தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய கலந்துரையாடல்
- உத்தேச இலங்கை ‑ தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய கலந்துரையாடல்கள் 2023 திசெம்பர் மாதமளவில் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய உடன்படிக்கையை 2024‑02‑03 ஆம் திகதியன்று கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடல்களின் 6 ஆம் 7 ஆம் சுற்றுக்களின் போது காணப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைவாக HS Code 2022 என்பதை அடிப்படையாகக் கொண்டு, 15 வருட காலத்திற்குள் HS Code இன் 80 சதவீதத்தை தளர்த்துவதற்கும் 15 - 18 வருட காலப்பகுதிக்குள் HS Code இன் 5 சதவீதத்தை பகுதியளவில் தளர்த்துவதற்கும் HS Code இன் எஞ்சிய 15 சதவீதத்தை எதிர்மறை பட்டியலில் சேர்ப்பதற்கும் இயலுமாகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை இறுப்புத் தளர்த்தல் நிகழ்ச்சித்திட்டம் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதன் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.