• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை மின்சார சட்டமூலம்
- மின்சார துறையின் பொருட்டு நிறுவன ரீதியிலான மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தி தற்கால பொருளாதார, சமூக மற்றும் நிர்வாக தேவைகளுக்கு பொருத்தமான விதத்தில் புதிய மின்சார சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.