• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நுவரெலியா இராணி எலிசபத் மாவத்தையில் அமைந்துள்ள 'பழைய Cey Bank Rest கட்டடம் மற்றும் காணியை'' அபிவிருத்தி செய்து நடாத்திச் செல்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான நுவரெலியா இராணி எலிசபத் மாவத்தையில் அமைந்துள்ள 'பழைய Cey Bank Rest கட்டடம் மற்றும் காணியை' மீண்டும் அபிவிருத்தி செய்து நடாத்திச் செல்வதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களிடமிருந்து போட்டிகரமான முதலீட்டு பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப் பேச்சுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு, உரிய சொத்தை ஐம்பது (50) வருட காலப்பகுதிக்கு M/s Colonial Properties (Pvt.) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதன் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.