• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஆறு (06) மாதம் தொடக்கம் மூன்று (03) வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா உட்பட துணை உணவு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான Aflatoxin அளவீட்டு மட்டத்தை திருத்துதல்
- சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தாய் சேய் சுகாதார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆறு (06) மாதம் தொடக்கம் ஐந்து (05) வயது வரையிலான குறைந்த போசாக்கு நிலையினைக் கொண்ட பிள்ளைகளுக்கு துணை உணவாகவும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு துணை போசாக்கு உணவாகவும் திரிபோஷா வழங்கப்படுகின்றது. ஆயினும் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் கீழுள்ள ஒழுங்குவிதிகளில் விதித்துரைக்கப்பட்டுள்ள முழு Aflatoxin தொடர்பில் நிலவும் கடும் அளவீட்டு மட்டம் காரணமாக திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. ஆதலால் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட துணை உணவுகளில் இருக்கவேண்டிய Aflatoxin மட்டமான B1 வகை சார்பில் 5ppb மட்டம் மற்றும் மொத்த Aflatoxin மட்டம் 10 ppb மட்டம் என்னும் அளவீட்டு மட்டங்களை ஏற்புடையதாக்கிக் கொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.