• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் மிச்சிக்கன் மாநில பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கூட்டு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
- திறன் மேம்படுத்தல், ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை கட்டியெழுப்புதல், திறன் கமத்தொழிலுக்குரிய புத்தாக்கங்கள் மற்றும் நிலமட்ட உள்ளீடுகளை அபிவிருத்தி செய்தல் என்னும் நோக்கில் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் மிச்சிக்கன் மாநில பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கூட்டு உடன்படிக்கயொன்றை செய்து கொள்வதற்கு இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான உத்தேச வரைவு உடன்படிக்கைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க உத்தேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.