• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் நியதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பின்வரும் கட்டளைகள் மற்றும் நியதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 2023‑08‑29 ஆம் திகதியிடப்பட்டதும் 2347/06 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ள அரசிறை பாதுகாப்பு கட்டளை.

(ii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பின்வரும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வௌியிடப்பட்டுள்ள நியதிகள்:

* 2023‑08‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2343/11 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்டுள்ள நியதி.

* 2023‑08‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 2345/64 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்டுள்ள நியதி.

* 2023‑08‑21 ஆம் திகதியிடப்பட்டதும் 2346/16 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்டுள்ள நியதி.

* 2023‑09‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 2348/44 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்டுள்ள நியதி.

* 2023‑10‑14 ஆம் திகதியிடப்பட்டதும் 2353/77 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்டுள்ள நியதி.