• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை பொருளாதார ஆணைக்குழுவைத் தாபித்தல் மற்றும் இலங்கை புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைதல்
- முதலீடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டிற்கு நட்புறவு மிக்க சூழலை உருவாக்கும் பொருட்டு பலமான பொறிமுறையொன்று இருக்கவேண்டிய தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பவற்றை இணைத்து புதிய நிறுவனமொன்றைத் தாபிக்கும் பொருட்டு 2023‑01‑16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு உரிய துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏற்றுமதி மற்றும் முதலீடு தொடர்பிலான மேற்பார்வைக் குழுவானது சனாதிபதி செயலகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு உரிய சகல விடயங்களையும் ஆராய்ந்து புதிய நிறுவன கட்டமைப்பொன்றைத் தாபிப்பதற்கான பிரேரிப்புகளை சமர்ப்பித்துள்ளதோடு, குறித்த இந்த பிரேரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவன திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் அதன் கீழ் இலங்கை பொருளாதார ஆணைக்குழு மற்றும் அதுசார்ந்த பிரிவுகளை நிறுவன ரீதியில் தாபிப்பதனை ஆரம்பிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.