• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நொத்தாரிஸ் கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
- 2022 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க நொத்தாரிஸ் (திருத்த) சட்டத்தில் நிலவும் ஐயப்பாடுடைய பொருள் கோரல்கள் / உட்சிக்கல் நிலைமைக்கு மாற்று வழியாக இந்த சட்டத்தை திருத்துவதற்கு 2023‑05‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உரிய திருத்தங்களை உள்ளடக்கி சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.