• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பம்பலபிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் Marine Drive வீதிக்கு குறுக்கே அமைந்துள்ள பாதசாரிகளுக்கான பாலங்களை புனரமைத்தல்
- பம்பலபிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு செல்லும் முகமாக Marine Drive வீதிக்கு குறுக்காக அமைந்துள்ள பாதசாரிகளுக்கான பாலங்களின் பாதுகாப்பற்ற நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்காலிக படிகளை நிர்மாணிப்பதற்கும் துரிதமாக பாதசாரிகளுக்கான பாலங்களை மீள நிர்மாணிப்பதற்குமான தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அவசர அதேபோன்று அத்தியாவசிய நிர்மாணிப்பான குறித்த பாலங்களை மீள் நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை ஆறு (06) மாத காலத்திற்குள் பூர்த்தி செய்யும் நிபந்தனையின் கீழ் அரசாங்க அபிவிருத்தி, நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.