• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2024-01-15 ஆம் திகதி தொடக்கம் 2024-06-14 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மசகு எண்ணெய் மூன்று (03) கப்பல் தொகைகளை நாணய பத்திரம் மூலம் முப்பது (30) நாட்களுக்குள் செலுத்தும் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
- 2024-01-15 ஆம் திகதி தொடக்கம் 2024-06-14 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மசகு எண்ணெய் மூன்று (03) கப்பல் தொகைகளை நாணய பத்திரம் மூலம் முப்பது (30) நாட்களுக்குள் செலுத்தும் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை வழங்குவதற்கு விலைமனு கோரப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு 03 விலைமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விலைமனுக்கள் சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த பெறுகையை M/s Coral Energy DMCC, UAE நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு பதில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.