• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் பொருளாதார மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவக சட்டமூலம்
- பொருளாதாரம், சர்வதேச நிதி மற்றும் சர்வதேச வர்த்தகம் என்பவற்றுக்குரியதான ஆராய்ச்சிகள் மற்றும் கொள்கைகளை தயாரிப்பதற்கு செயற்படுதல், இந்த துறைகளில் அதி நவீன ஆராய்ச்சிகள் மற்றும் கற்கைகளை மேற்கொள்தல், பொருளாதாரம், நிதி, வர்த்தக கொள்கைகளை பலப்படுத்துதல் சார்பில் கருத்துக்களை வழங்குவதன் மூலம் பங்களிப்பினை நல்குதல் மற்றும் சர்வதேச, பிராந்திய வர்த்தக கொள்கைகளின் ஒருங்கிணைவான பயனை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இலங்கையின் பொருளாதார மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனமொன்றை தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.