• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சமூக பாதுகாப்பு முறையினை முறையான நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல்
- இலங்கையில் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 8.1 மில்லியன் கொண்ட மொத்த ஊழியர்களில் சுமார் 1.2 மில்லியன் அரசாங்க துறையிலும் சுமார் 3.4 மில்லியன் தனியார் துறையிலும் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, மொத்த ஊழியர்களில் சுமார் 58.4 மில்லியன் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என சனத்தொகை மற்றும் புள்ளிவிபர அறிக்கைகளுக்கு அமைவாக தெரியவந்துள்ளது. ஆயினும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் போன்ற சமூக பாதுகாப்பு முறைகளின் மூலம் தழுவப்பட்டுள்ளது. சுமார் 2.5 மில்லியன் ஊழியர்களிலும் குறைந்த அளவினர் ஆவர். இதற்கு மேலதிகமாக முறைசாரா தொழிற்துறை சார்பில் பல்வேறுபட்ட அரச நிறுவனங்களின் மூலம் கமநல காப்புறுதி, கடற்றொழில் காப்புறுதி போன்ற பல்வேறு சமூக பாதுகாப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அதற்கான செலவுச்சுமை அரசாங்கத்தினால் ஏற்கப்படுகின்றது. சமூக பாதுகாப்பு முறைகள் பல்வேறுபட்ட நிறுவனங்களினூடாக பல்வேறு முறைகளின் கீழ் நடைமுறைப்படுத்துகின்றமையினாலும் இதன் பொருட்டிலான செலவுகள் அரசாங்கத்தினால் அல்லது சேவைக் கொள்வோரினால் ஏற்கவேண்ட நேரிடுகின்றமையினாலும் ஏற்படும் இடையூறுகளினால் இந்த சமூக பாதுகாப்பு முறைகளின் பயனுள்ள தன்மையும் வினைத்திறமையும் சவாலுக்கு உட்பட்டுள்ளமையினால் நடைமுறையிலுள்ள சகல சமூக பாதுகாப்பு முறைகளை ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தும் பொருத்தப்பாடு இனங்காணப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் இது சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த விடயத்திற்குரிய சர்வதேச அனுபவங்களையும் ஆராய்ந்து நடைமுறையிலுள்ள சகல சமூக பாதுகாப்பு முறைகளையும் ஒரே நிறுவனத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக சகல தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.