• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"ஶ்ரீ லங்கா அபிமன்" - தேசிய கலைவிழா
- பொது மக்களின் இரசனை மற்றும் பொழுதுபோக்கு என்பவற்றின் அபிவிருத்தியின் பொருட்டு பல்வேறுபட்ட கலாசார நிகழ்ச்சிகளை ஒன்று திரட்டி 2023 திசெம்பர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் 2024 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலும் "ஶ்ரீ லங்கா அபிமன்" - தேசிய கலைவிழாவை நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கொழும்பு 07 ஆநந்த குமாரசுவாமி மாவத்தை மற்றும் அதற்கண்மையில் அமைந்துள்ள தாமரை தடாக அரங்காட்டற்கலை மண்டபம், தேசிய கலாபவனம், ஜோன்த சில்வா அரங்காட்டற்கலை மன்றம், விகார மஹாதேவி பூங்கா, புதிய நகரசபை மண்டபம்., தேசிய அருங்காட்சியகம் அண்மித்த பிரதேசங்களை மையப்படுத்தி உத்தேச கலை விழாவை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அதனோடு இணைந்த நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரசாங்க தனியார் நிறுவனங்கள் என்பன கூட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றாக "ஶ்ரீ லங்கா அபிமன்" - தேசிய கலைவிழாவை நடாத்தும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.