• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தியஸ்தத்திற்கான சர்வதேச அமைப்பி​னை தாபிப்பதற்கான கூட்டு பிரகடனம்
- அரசாங்கங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என்பவற்றுக்கிடையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட மத்தியஸ்தத்திற்கான சர்வதேச அமைப்பொன்றை தாபிக்கும் பொருட்டு சீன அரசாங்கத்தினால் பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சீன அரசாங்கம் அக்கறையுள்ள நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதோடு, குறித்த ஆரம்ப கலந்துரையாடல்கள் சிலவற்றில் இலங்கையும் கலந்துகொண்டது. உத்தேச அமைப்பினை தாபிப்பதற்கான கூட்டு ஆரம்ப பிரகடனமானது 2022 யூலை மாதம் வௌியிடப்பட்டுள்ளதோடு, இந்த கூட்டு பிரகடனமானது சீனா உட்பட சுமார் 10 நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு பிரகடனமானது இலங்கையினால் அங்கீகரிப்பது சம்பந்தமான கருத்துக்கள் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட ஏனைய அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, கூட்டு பிரகடனத்தை அங்கீகரிப்பதன் மூலம் தற்போது இலங்கை செய்துகொண்டுள்ள சர்வதேச பொறுப்புகளின்பால் எவ்வித தாக்கமும் நிகழாதென அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மத்தியஸ்தத்திற்கான சர்வதேச அமைப்பி​னை தாபிப்பதற்கான கூட்டு பிரகடனத்தை அங்கீகரிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.