• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எழுத்தறிவை மேம்படுத்துவதற்காக Room to Read அமைப்புக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- அரசியலமைப்புக்கு அமைவாக “எழுத்தறிவின்மையை முற்றாக இல்லாதொழிப்பதற்கும் எல்லா நிலைகளிலும் உலகளாவியதும் சமத்துவமானதுமான கல்வி வாய்ப்புக்கான உரிமையை எல்லா பிரசைகளுக்கும் உறுதிப்படுத்துவதற்கும்” இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. குறித்த பணியின் போது அரசாங்கத்தினால் சகல வசதிகளையும் வழங்குவது நடைமுறை ரீதியில் கடினமான பணியொன்றாகையினால் வேறு தரப்பினர்களின் ஒத்துழைப்பும் அதற்காக பெற்றுக்கொள்ளப்படும். அதற்கமைய 2005 ஆம் ஆண்டிலிருந்து கல்வி அமைச்சினால் Room to Read அமைப்புடன் இணைந்து வாசித்தலை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பெண் பிள்ளைகளின் கல்வி நிகழ்ச்சித்திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 2023‑12‑01 ஆம் திகதி தொடக்கம் 05 வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு கல்வி அமைச்சுக்கும் Room to Read அமைப்புக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.